பாய்ஸ் படத்தில் நடிக்க வந்த சித்தார்த்துக்கும்- மீடியாக்களுக்கும் இதுவரை ஏழாம் பொறுத்தமாகத்தான் இருந்து வந்தது. காரணம், நான் திறமையான நடிகன் எனக்கொன்றும் யாருடைய தயவும் தேவையில்லை என்று பேசக்கூடியவர் சித்தார்த்.
அதனால் மீடியாக்களை விட்டு விலகியே இருந்தார். ஆந்திராவில் சமந்தாவுடன் அவரை இணைத்து காதல் செய்திகள் பரவியபோது அவரால் எந்த மீடியாக்களையும் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதன்காரணமாகத்தான் ஆந்திராவில் இருந்து கோடம்பாக்கத்தை நோக்கி ஓட்டமாக ஓடி வந்தார் சித்தார்த்.
அப்படி வந்தவர், முன்பு நிருபர்களை எதிரிகள் போன்று பார்த்து விலகிச்சென்றவர், திடீரெனறு பாசம் காட்டத் தொடங்கினார். நீங்களெல்லாம் எனக்கு அண்ணன் தம்பிகள்தான். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்று கனிவோடு பேசி வருகிறார்.
குறிப்பாக, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா படங்களுக்குப்பிறகு தற்போது காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்களை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். அதோடு, அந்த படங்களை சார்ந்தவர்களிடமும், மீடியாக்கள் இல்லேன்னா நம்முடைய உழைப்பு வெளியில் தெரியாமல் போய்விடும். அதனால் அவர்கள் நம்முடைய நிறைகுறைகளை சுட்டிக்காட்டும்போது அது எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிறை சொல்லும்போது ஏற்றுக்கொள்வது, குறை சொல்லும்போது கோபித்துக்கொள்வதெல்லாம் ரொம்ப ரொம்ப தவறு என்றும் மீடியாக்களுக்கு சாதகமாக பேசி வருகிறார் சித்தார்த்.