இந்த நிலையில், மஞ்சப்பை படத்தில் தாத்தா ரோலில் நடித்த ராஜ்கிரண், சிவப்பு படத்தில் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கிறார். அதையடுத்து, மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஏற்கனவே மஞசப்பையில் நடித்த லட்சுமிமேனன் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், சசிகுமார்-லட்சுமிமேனன் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் இப்படத்தில் சண்டக்கோழியில் விஷாலின் அப்பாவாக நடித்தது போன்று கார்த்தியின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறாரா? இல்லை வேறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறாரா? என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை அவர் நடித்த வேடங்களில் கொம்பன் கேரக்டர் அவருக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார்கள்.