தமிழில் குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானவர் கெளதமி. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படம் ஹிட்டாக அமைந்ததோடு சூப்பர் ஸ்டாருடன் டூயட் பாடியதால் அதன்பிறகு முன்னணி நடிகையாகி விட்டார் கெளதமி.
பின் கமலுடன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அப்போது கமலுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தற்போது அவர் நடித்து வரும் த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் மீனா நடித்த ரோலில் நடிக்கும் கெளதமி, அந்த படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியானபோதும் எந்த மொழியிலும் அப்படத்தை அவர் பார்க்கவில்லையாம்.
காரணம், அந்த படங்களைப்பார்த்து விட்டு தமிழ் ரீமேக்கில் நடித்தால் அந்த படங்களில் நடித்துள்ள கதாநாயகிகளின் சாயல் தன்னையும் அறியாமல் தன்னிடமிருந்து வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்பதால். இதுவரை அப்படங்களை பார்க்கவில்லையாம் கெளதமி. அந்த வகையில், பாபநாசம் படத்தில் தனது நடிப்பு பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை தான் நடிப்பில் பெற்ற மொத்த அனுபவத்தையும் கொண்டு திருநெல்வேலி தமிழச்சியாக மாறி பக்காவாக நடித்துக் கொண்டிருக்கின்றார் கெளதமி.