ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, ஆர்.பி.செளத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.விஜய், தாணு, ஆர்யா, விக்ரமன், தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றபடி விஜய்யின் மற்ற படங்களுக்கு அழைப்பது போன்று பெருவாரியான அவரது நலம்விரும்பிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.
மேலும், கடந்த 15-ந்தேதி சென்னையில் நடந்த ஐ படத்தின் ஆடியோ விழாவை மாதிரி இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டு 11 மணிக்குத்தான் விழா நிறைவு பெறுமோ என்று நினைக்கப்பட்டதற்கு மாறாக, 7.10க்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் விழாவை நிறைவு செய்து விட்டார்கள்.
முன்னதாக, விழா நடைபெறும்போது சில அமைப்புகள் போர்க்கொடி பிடித்து விடுமோ என்கிற அச்சுறுத்தல்களும் ஒரு பக்கம் இருந்ததால் விழா நடைபெற்ற பகுதியில் பலத்த செக்யூரிட்டிகள் போடப்பட்டிருந்தது. விழா அரங்கிற்குள் வருபவர்களிடம் அழைப்பிதழோ அல்லது பத்திரிகையாளர்கள் என்றால் ஐடி கார்டோ இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆக, கத்தி ஆடியோ விழா பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் நடந்தது முடிந்தது.
இவ்விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ். பேசுகையில், கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். நான் விஜய்யிடத்தில், துப்பாக்கி ஜெகதீஷ், கத்தி ஜீவானந்தம், கதிரேசன் இவர்களில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்றேன் அவர் கதிரேசன்தான் பிடிக்கும் என்றார். எனக்கும் அப்படித்தான். அதேபோல் ரசிகர்களுக்கும் கதிரேசனைத்தான் பிடிக்கும்.
அதோடு, துப்பாக்கி படத்தைவிட கத்தி படம் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். அந்த அளவுக்கு விஜய்யின் கதாபாத்திரம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும், நான் பணத்துக்காக இந்திக்கு சென்று படம் இயக்கவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வந்த ஒருவனாலும் பாலிவுட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் எடுக்கிறேன். நானும், விஜய்யும் பணத்திற்காக மட்டுமே படமெடுக்கவில்லை. அதோடு, நானும் பச்சை தமிழன்தான். எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது என்பதை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.