சமந்தாவும், ஸ்ருதிஹாசனும், தெலுங்கில்தான் படத்துக்குப் படம் போட்டி போட்டார்கள் என்று பார்த்தால், இவர்களது போட்டி தற்போது தமிழிலும் தொடர்கிறதே என்று ஆந்திரத் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம்.
கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும்தான் பலத்த போட்டியாக இருந்தது.
'பலுப்பு' படத்தில் ரவி தேஜாவுடனும், 'ராமையா ஒஸ்தாவையா' படத்தில் ஜுனியர் என்டிஆருடனும், 'எவடு' படத்தில் ராம் சரண் தேஜாவுடனும், 'ரேஸ் குர்ரம்' படத்தில் அல்லு அர்ஜுனுடனும் கடந்த இரண்டு வருடங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ருதிஹாசன்.
சமந்தா கடந்த ஆண்டில், 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி சேட்டு' படத்தில் மகேஷ் பாபுவுடனும், சித்தார்த்துடன் 'ஜபர்தஸ்த்' படத்திலும், பவன் கல்யாணுடன் 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திலும், ஜுனியர் என்டிஆருடன் 'ராமய்யா வஸ்தாவைய்யா' படத்திலும், இந்த ஆண்டில் , 'மனம்', 'ஆட்டோ நகர் சூர்யா' படத்தில் நாக சைதன்யாவுடனும் நடித்தவர், தற்போது ஜுனியர் என்டிஆருடன் 'ரபாஷா' படத்திலும் நடித்து வருகிறார்.
அவர்கள் இருவரும் நடித்த தெலுங்குப் படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள் என்பதால் அங்கு கடும் போட்டி நிலவியது. தற்போது தமிழில் சமந்தா, 'அஞ்சான், கத்தி, 10எண்றதுக்குள்ளே' ஆகிய படங்களிலும், ஸ்ருதிஹாசன், 'பூஜை, விஜய் படம்' ஆகிய படங்களிலும் நடித்து தமிழிலும் அவர்களது போட்டியைத் தொடர்கிறார்கள்.