மேலும் பூஜாவுக்கு, தமிழில் படங்களும் இல்லாததால் தாய்வீடான ஸ்ரீலங்காவிற்கு சென்று விட்டார். ஆனால், சமீபத்தில் ஆர்யா தயாரித்து வெளியிடும் அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்த பூஜா, அந்த விழா மேடையில் ஏறியதும், ஆர்யாவை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு பல நாட்கள் சென்னையிலேயே டேரா போட்ட விட்டுதான் இலங்கை சென்றார்.
அதையடுத்து, சமீபத்தில் பிலிம்பேர் விருது விழாவுக்கு வந்த பூஜா, இப்போது ஆர்யாவுடன் மீண்டும் நட்பு வளர்க்கத் தொடங்கி விட்டார். அதனால் தன்னை முற்றுகையிட்ட அனைத்து நடிகைகளையும் ஏறக்கட்டிய ஆர்யா, பூஜாவுடன் பொழுதுகழித்து வருகிறார். மேலும், ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கும் விசிட் அடிக்கும் பூஜா, பேக்அப் ஆனதும் அவரது காரிலேயே ஏறி பறக்கிறாராம். இதனால் ஆர்யாவின் அபிமான ஹீரோயினிகள் அனைவரும் பூஜா மீது செம காண்டில் இருக்கிறார்கள்.