அரசியலில் ஈடுபட்டு கோஷ்டி அரசியலை சமாளிக்க முடியாமலல் நொந்து திரும்பி இருக்கும் பூ நடிகை. சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தயாராகிக்கிட்டிருக்காராம். சினிமாவில் அக்கா, அண்ணி வேடம், சின்னத்திரையில் தொகுப்பாளினி, சினிமா தயாரிப்பாளர் என அத்தனை அவதாரங்களிலும் மீண்டும் முழு மூச்சோடு இறங்கப்போகிறாராம்.
இன்னொரு கட்சியில் சேருவதான முடிவுக்கு கணவர் குலம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இப்போது மீண்டும் சின்னத்திரை, பெரிய திரை பக்கம் வரப்போகிறாராம். இவரைப்போலவே கன்னடத்தில் அரசியல் கசந்த ரம்யமான குத்து நடிகையும் சினிமாவே நமக்கு போதும். இருக்கிற விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட வேண்டாமுன்னு முடிவு பண்ணியிருக்காராம்.