வாழை இலை உபயோகத்தின் நன்மைகள்.

தமி­ழர்­க­ளு­டைய கலா­சா­ரத்தில் முக்­கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.சுப காரி­யங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலை­வாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்­பத்தின் மேலே தேங்காய் வைப்­பது வழக்கம். இதை தமி­ழர்கள் தமது பாரம்­ப­ரி­ய­மா­கவே செய்து வரு­கி­றார்கள். தலை­வாழை என்­றதும் நம்­அ­னை­வ­ருக்கும் ஞாபகம் வரு­வது விருந்­துதான். அது சைவ உண­வாக இருந்­தாலும்அசைவ உண­வாக இருந்­தாலும் இலையில்தான் நிச்­சயம் இருக்கும்.
இன்­றைய அசுர வேக­மான முன்­னேற்­றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்­கின்­றது. அதுவும் நகர்ப்­பு­றங்­களில் தட்டு அல்­லது பொலித்தீன் பேப்­பரில் தான் இங்கு இருக்கும் ஹோட்­டல்­களில் உணவு கிடைக்­கி­றது.
இது கால மாற்­றத்­தினால் ஏற்­பட்ட மாற்றம். நகர்ப்­பு­றத்தில் இருப்­ப­வர்கள் சாப்­பிட்­டுத்தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிரா­மத்­துக்கு விடு­முறை நாட்­களில் செல்­லும்­போதும்கூட தட்­டி­லேயே வாடிக்­கை­யாக உணவு சாப்பிடுகின்றனர். அதை மாற்ற முயற்­சிக்­கலாம். வாழை இலையில் சாப்­பி­டும்­போது ஏற்­படும் நன்­மை­களை அறியும் போது ஏன் நம் முன்­னோர்கள் இலையில் சாப்­பிட்­டார்கள் என்­பது நமக்கு தெரி­ய­வரும்.

வாழை இலையில் சாப்­பி­டு­வதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இனி விரி­வாக காண்போம்.

சூடான உண­வு­களை வாழை இலையில் வைத்து பரி­மா­றும்­போது அதில் ஒரு­வித மணம்­தோன்றும். அதற்கு நம்­மு­டைய பசி­யினை தூண்டும் செய்கை உண்டு. இத­னால்தான் நம் முன்­னோர்கள் சாப்­பி­டு­வ­தற்கு வாழை இலையினை தேர்ந்­தெ­டுத்­தனர்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்­கொண்டு வந்தால் தோல் பள­ப­ளப்­பாகும். உடல் நலம் பெறும். மந்தம். வலி­மைக்­கு­றைவுஇள­நரை வராமல் நீண்­ட­நாட்கள் தலை­முடி கறுப்­பாக இருக்கும்.

 வாழை இலை ஒரு கிருமி நாசி­னி­யாகும். உணவில் உள்ள நச்­சுக்­கி­ரு­மி­களை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்­டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்­கி­யத்தை அளிக்­கி­றது. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை(குளோ­ரோபில்) உணவை எளிதில் ஜீர­ண­ம­டைய செய்­வ­துடன் வயிற்­றுப்­புண்ணை ஆற்றும் தன்மை கொண்­டது. அலு­வ­லகம் செல்லும் அதி­கா­ரிகள்பணி­யா­ளர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் மதிய உணவை பார்­ச­லாக எடுத்து செல்ல வாழை இலை சிறந்­தது.

 வாழை இலையில் சாப்­பாடு பார்­சல்­செய்தால் சாப்­பாடு கெடா­மலும்தீக்­கா­யம் ­ஏற்­பட்­ட­வர்­களை வாழை ­இலைமீ­துதான் படுக்க வைக்க வேண்டும். அப்­போ­துதான் சூட்டின் தாக்கம் குறையும். பச்­சிளம் குழந்­தை­களை உட­லுக்கு நல்­லெண்ணைய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்­படும் விட்­டமின் டியும்இலையில் இருந்து பெறப்­படும் குளு­மையும் குழந்­தை­களை சரும நோயில் இருந்து பாது­காக்கும்.சின்ன அம்மைபடுக்கை புண்­ணுக்கு வாழை ­இ­லையில் தேன்­த­டவி தினமும் சில­மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குண­மாகும். சோரி­யாசிஸ்தோல் சுழற்சிகொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். இது போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் வாழை இலைக்கு உண்டு. எனவே வாழ்க்கையில் நோயின்றி வாழ வாழை இலையை பயன்படுத்துங்கள்.


நன்றி : வீரகேசரி