நடிகை ராய் லட்சுமி திறக்கவிருக்கும் ரசிகர் மன்றம்!


தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அதோடு காஞ்சனா மெகா ஹிட் படத்தின் ஹீரோயினியும்கூட. ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது.

அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய உற்சாகத்துடன் நடித்து வருகிறார் அவர். அதோடு, தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தற்போது இணையதளங்களில் தனது கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பு கூட்டி வரும் ராய் லட்சுமி, தனது பேஸ்புக்கில் வந்து லைக் கொடுக்கும் ரசிகர்களுடன் நட்பை தொடர்ந்து வருகிறார். அதிலும் தன்னை உருகி உருகி ரசிக்கும் இளவட்ட நேயர்களை இனிமேல் சந்திக்கப்போகிறாராம் ராய்லட்சுமி.
அப்படி தனக்கான ரசிகர்களை அதிகப்படுத்தி தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்போகிறாராம் ராய் லட்சுமி. அந்த ரசிகர் மன்றங்கள் மூலம் த்ரிஷா, ஹன்சிகா போன்ற நடிகைகள் போன்று சமூக சேவைகளையும் செய்ய திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி, இதுவரை வளர்ந்து வரும் ஹீரோக்கள், வளர்ந்து வரும் டைரக்டர்களை கண்டும் காணாமலும் இருந்து வந்த அவர், இனிமேல் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றாலும் புதுமுக ஹீரோக்களுடனும் நடிப்பாராம். 

அந்த வகையில், சினிமாவைப்பொறுத்தவரை நான் பார்க்காத ஹீரோக்கள் இல்லை, டைரக்டர்கள் இல்லை. முன் வரிசையில் இருக்கும் அனைவருடனும் பணியாற்றி விட்டேன். ஆனால், இப்போது புதியவர்களின் புதிய திறமையை காண வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களால்தான் என்னை வித்தியாசமான கோணத்தில் சினிமாவில் காட்ட முடியும் என்றும் கருதுகிறேன் என்று சொல்லும் ராய் லட்சமி, தற்போது தமிழில் நடித்துள்ள ஈட்டி, அரண்மனை படங்களைத் தொடர்ந்து நடிப்பதற்கு சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.