ஆர்யாவின் அடுத்த ஜோடி தமன்னா!

ஆர்யா என்றாலே எல்லா கதாநாயகிகளுக்கும் எளிதில் பிடித்துவிடும். இவருடன் ஒரு படம் சேர்ந்து நடித்தாலே தான் விட்ட மார்கெட்டை பிடித்து விடலாம் என்று பல ஹீரோயின்ஸ் போட்டி போட்டு இவருடன் நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஆர்யாவே ஒரு கதாநாயகியை தன் படத்திற்கு வேண்டும் என்று நூல் விட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, நம் எல்லோருக்கும் பிடித்த தமன்னா தாங்க.பாஸ்(எ)பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குனர் ராஜேஷ். இப்படத்தில் தமன்னாவை கதாநாயகியாக்க ஆர்யாவே பெர்சனல்லாக சிபாரிசு செய்தராம்.