தேவையான பொருட்கள்.
தேசிக்காய் -தேவைக்கேற்ப
மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து கொள்ளவும்.
அதில் சர்க்கரை, தேசிக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும்.
அக்கலவையில் பாலும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
இதை குளிர வைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி, திராட்சை தூவி பறிமாற வேண்டும்.