தேவையான பொருட்கள்.
எண்ணெய் - 500 கிராம்
வாழைக்காய் – 5
உப்பு - தேவையான அளவு
கடலைப் பருப்பு மாவு - 1/2 கிலோ
மிளகாய்த தூள் - போதுமான அளவு
செய்முறை :
வாழைக்காய்களைத் தோல் சீவாமல் நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
கடலைப் பருப்பு மாவில் மிளகாய்த் தூளைக் கலந்து, தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.
ஒவ்வொரு வாழைக்காய்ச் சீவலாக எடுத்து, கடலைப் பருப்பு மாவுக் கலவையில் பக்குவமாய்த் தோய்த்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, வேக விடுங்கள்.
வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுடச் சுடத் சாப்பிட்டால், வாழைக்காய் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்.