வாலிப வயதில் ஹார்மோன் சுரப்பிகளால் முகத்தில் எண்ணை படிவது சகஜம்.மேலும்
1. உணவுப் பழக்கம்
2. ஹார்மோன் சுரக்கும் அளவு
3. கருத்தரித்த நேரம்
4. கருத்தடை மாத்திரை
5. ஒப்பனைப் பொருட்கள்
6. வேனில் காலம் இதிலிருந்து முகத்தை எப்படிப் பாதுகாப்பது?
1. எண்ணை படிந்த சருமத்தை சூடான நீரில் அடிக்கடி கழுவும்போது தோலில் உள்ள துவார அடைப்பு நீங்கும். எண்ணையும் கரையும்.
2. கடின சோப்புகளைத் தவிர்க்கவும். மருந்து கலந்த ஆண்டிபாக்டீரியல் (Anti bactorial) சோப்பு உபயோகிக்கவும்.
3. முகம் கழுவும்போது நுனி விரல்களால் கீழிருந்து மேலாக மஸாஜ் செய்யவும்.
4. மண் பூச்சு உபயோகிக்கவும்.
5. முகத்தில் ஒப்பனை ஆரம்பிக்கும்முன் ஆண்டிஸெப்டிக் டே க்ரீம் தடவவும்.
6. அவ்வப்பொழுது இரவில் ஆண்டிஸெப்டிக் நைட் க்ரீம் தடவவும்.
முக சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள்
1. சோற்றுக் கற்றாழை ஜெல் தடவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
2. லாவெண்டெர் (Lavender) கலந்த நீர் நல்லது.
3, லெமன் க்ராஸ், ரோஜா மொட்டு பௌடர் கலந்த நீரில் முகத்தில் ஆவி படும்படி 15 நிமிடம் இருப்பதால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
4. ஆப்பிள் ஸைடர் வீனிகர் எண்ணை படியும் இடத்தில் தடவினால் நல்லது.
நல்ல உறக்கம், உடற்பயிற்சி, சத்தான உணவு மிக முக்கியம். முகத்தில் மஸாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உண்ண வேண்டியவை
1. புரதச் சத்து நிறைந்த உணவு தேவை. ஆனால் சர்க்கரை, உப்பு கட்டுப்படுத்த வேண்டும்.
2. பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்க்க வேண்டும்.
3. விட்டமின் B2 நிறைந்த பீன்ஸ், காராமணி, கொட்டைகள், முளைகள்அதிகம் சேர்க்க வேண்டும்.
4. அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும்.
5. எண்ணையில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
6. இனிப்பு உணவு, சாக்லேட், குளிர் பானங்கள் தவிர்க்கவும்.