மைதா 300 கிராமை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.
மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒன்றரை கிலோ சர்க்கரையை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய்யையும் வண்ணப்பொடியையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.
எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்டி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்கி ஆறியதும் பரிமாறவும்.