கூடை பொம்மைகளை மார்பு வரை தயாரித்தால் போதுமானது. கரடி, நாய், பூனை, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம். பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும்.
அது முகம், கை, உடல், ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும். வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள்.
தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு மூக்கு, கண், பட்டன்களை பொருத்த வேண்டும். சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும்.
இப்போது பொம்மை தயார்.பின்னர், ரெடிமேடாக வாங்கிய பிரம்பு கூடையின் கைப்பிடி, மேல், கீழ் புற விளிம்பு ஆகியவற்றில் சன்னமான கலர் ரிப்பன்களை சுற்ற வேண்டும். கூடை மேல் ஏற்கனவே தயாரான பொம்மைகளை வைத்தால் கூடை பொம்மை தயார்.பரிசு பையில் ஷீட்டில் கூடை பொம்மையை வைத்து பூக்களை கொண்டு பொக்கே செய்வது போல் பேக்கிங் செய்ய வேண்டும். செலோ டேப் கொண்டு ஒட்டி, பேக்கிங் ஷீட்டில் ரிப்பன் கட்டினால் கூடை பொம்மை பொக்கே தயாராகி விடும்.