காது குடைவது நம்மில் பலரிடம்
பொதுவாகக் காணப்படும் பழக்கம் ஆகும். சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர். இந்த பழக்கம்
நல்லதா? அல்லது இதனால்
ஏதேனும் கேடு ஏற்படுமா?
மனிதக்காது வெளிக்காது, நடுக்காது, உட்காது என மூன்று பிரிவுகளாக உள்ளது இந்த மூன்று பாகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால்தான் காது கேட்கும்; இல்லையென்றால் காது கேட்காது போய்விடும்.
வெளிக்காது
சத்தத்தை திரட்டி நடுக்காதுக்கு அனுப்பும். நடுக்காது உள் காதுக்கு அனுப்பும்
வேலையை செய்யும்.அதாவது நடுக்காதைத் தாண்டி இருக்கும் எலும்புகள் சத்தத்தை பெருக்கி
உள் காதுக்கு அனுப்பி வைக்கும்.
உள் காதில் வெளியில் இருந்து சென்ற ஓசை மின் சக்தியாக மாற்றம் பெற்று Auditory Nerve எனப்படுகின்ற ஓசை நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். இவ்வளவு செயற்பாடுகளையும் நமது நுண்ணிய உறுப்பான காது நொடிப் பொழுதில் செயல்படுத்துகிறது
உள் காதில் வெளியில் இருந்து சென்ற ஓசை மின் சக்தியாக மாற்றம் பெற்று Auditory Nerve எனப்படுகின்ற ஓசை நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும். இவ்வளவு செயற்பாடுகளையும் நமது நுண்ணிய உறுப்பான காது நொடிப் பொழுதில் செயல்படுத்துகிறது
வெளியில் உள்ள
ஓசையைக் கேட்கின்ற பணியினை மட்டுமே காதானது செய்கின்றது என்றும் அது ஒரு வேலை தான்
என்றும் நினைத்து விடாதீர்கள். ஒருவரின் உடலில் சமநிலை (பாலன்ஸ்) தன்மையை
பராமரிக்கின்ற காவல்காரனாகவும் காதுகள் செயல்படுகின்றன. உதாரணமாக ராட்டினம்
போன்றவற்றில் ஏறிச் சுற்றுகின்ற போது நீங்கள் தலை சுற்றி கிழே தூக்கி எறியப்படாமல்
பாதுகாப்பதே உங்கள் காதுகள் தான்
காதைப்
பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் பிரச்சனையாகக் கருதுவது காதில் மெழுகு போன்ற அழுக்கு
சேருவதுதான். அழுக்கு சேருவது இயல்பானது. காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார்
ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம்
தான் காதிற்குள் தூசி, அழுக்கு
செல்லாமல் பாதுக்காக்கின்றது. மேலும் வெளிக்காதின் தோல் பக்டீரியா தாக்குதல்
உள்ளிட்ட நோய் தொற்றினால் காது பாதிக்கப்படுவதை தடுக்கிறது
இயற்கையாகவே
காதில் உள்ள ஒரு தொழில்நுட்பம் (மெக்கானிசம்) இப்படி சேருகின்ற அழுக்கை தானாகவே
வெளியே தள்ளிவிடும். இது இயற்கை!! இது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இது
தெரியாமல் நாம் அதை சுத்தம் செய்ய முற்படும்போது தான் அந்த இயற்கையான
தொழில்நுட்பத்திற்கு தடை ஏற்பட்டு அழுக்கு மென்மேலும் சேர ஆரம்பிக்கிறது. அதை
தொடர்ந்து அழுக்கானது கட்டி போல உருண்டு திரண்டு காதை அடைத்துக் கொள்வதுடன்
கடுமையான காது வலியையும் ஏற்படுத்தி விடலாம் அழுக்கு அதிகமாகி கட்டியாக திரண்டு
நிற்கின்ற காரணத்தால் சிலருக்கு காது அடைத்துக் கொண்டு கேட்காமல் இருந்தாலும்
இருக்கலாம்
சாலைகளில்
வாகனங்களின் அணிவகுப்பு, தொழிற்சாலைகளின்
ஆதிக்கம், மாசு படர்ந்த
சூழல்கள் போன்றவற்றிற்கு மத்தியில் தான் நாம் வாழ வேண்டி இருக்கிறது. எனவே இன்றைய
நாளில் காதில் மிதமிஞ்சிய அழுக்கு சேருவது இயல்பாகிவிட்டது. இதை நாமாகவே சுத்தம்
செய்ய முற்படுவது தவறு. ஏதும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் நினைத்தால் உடனே சுய
மருத்துவத்தை கைவிட்டு ஒரு நல்ல மருத்துவரை நாடுங்கள். அவர் உங்களுக்கு தகுந்த
ஆலோசனைகள் அல்லது சிகிச்சையை வழங்குவார்
அழுக்கு சேர்ந்து
கட்டியாக உள்ள நிலையில் டாக்டரிடம் சென்றால் அவர் சொட்டு மருந்து போடுவார். மூன்று
அல்லது நான்கு தினங்கள் சொட்டு மருந்தை பயன்படுத்திய பிறகு மருத்துவரிடம் மீண்டும்
சென்றால் கருவிகள் மூலம் அழுக்கை வெளியே எடுத்து விடுவார் அல்லது சிரிஞ்சு மூலம்
தண்ணீரைப் பீச்சி அழுக்கை வெளியே எடுத்து விடுவார்
காதில் ஏதாவது
பாதிப்பு வந்தால் மக்கள் பவிதமாக கைச் சிகிச்சைகளை செய்து கொள்கிறார்களே இது சரி
தானா
சுய மருத்துவம்
என்கிற பெயரில் காச்சிய எண்ணெய் ஊற்றுவது தண்ணீரைப் பீச்சி அடிப்பது சில
பச்சிலைகளின் சாறினைப் பிழிவது வெங்காயச் சாறினை ஊற்றுவது போன்ற வழக்கங்களை
விட்டொழிக்க வேண்டும்
அடுத்து இன்றைய
நாளில் பலரிடம் 'பட்ஸ்' உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. பட்சை தடை
செய்தால் கூட நல்லது
அதிக சத்தத்தை
வைத்துக்கொண்டு வாக்மேன் கேட்பது அதிக ரேடியேஷன் உள்ள செல்போன்களை தொடர்ந்து
பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
ஜலதோஷம்
தொண்டைபாதிப்பு வந்தால் உடனடியாக எச்சரிக்கையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ள
வேண்டும்
இவ்வாறான
விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் காதிற்கு வரும் கஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம்
எனவே காதில்
சேரும் அழுக்கினை நாம் எடுக்கத் தேவை இல்லை. அழுக்கு தானாக வெளியேறும் விதத்தில்
இயற்கை அதி அற்புதமாக படைக்கப்பட்டிருகிறது. ஆகையால் பட்ஸ், குச்சி, சாவி, பேனா, பின்
போன்றவற்றால் காதினைக் குடையாதீர்கள்