நாம் உண்ணும் உணவை செரிக்கும் வேலையை வயிறு மட்டும் பார்த்துக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. 32 பற்கள் எனும் கிரைண்டரால் அரைத்த உணவையே வயிறு செரிமானம் செய்யும். அதனால் நாம் ஒழுங்காக மென்று சாப்பிடாமல், ஒன்றும் பாதியுமாக விழுங்கினால் அந்த உணவை வயிறாலும் செரிக்க முடியாது.
செரிக்காமல் மிஞ்சிய உணவு உடலில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.
மென்று சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளை மட்டுமே வற்புறுத்துகிறோம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சாப்பாட்டையும் குறைந்தது 20 விநாடிகள் மென்று சாப்பிட வேண்டும்.
அதற்காக ஒவ்வொரு வாய் சாப்பாட்டையும் நேரம் குறிப்பிட்டு மென்று கொண்டிருக்காதீரகள்.
நாம் உணவை முறையாக மென்று சாப்பிட வேண்டும் என்பதுதான் கணக்கே தவிர, 1, 2 என்று எண்ணுவது அல்ல.
நாம் உணவை உண்ட உடன் நமது செரிமான உறுப்புகள் பல்வேறு வேதிப்பொருள்களைக் கலந்து உணவை செரிக்க வைக்கும். நமது வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் பிரதான வேதிப்பொருள்.
நாம் உண்ணும் உணவுடன் நமது எச்சிலும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று செரிமானத்தை ஏற்படுத்தும்.