"மவுத் வாஷ் பாவித்தால் புற்றுநோய் வரும்" ஆய்வு முடிவு.

மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காலஸ்கோ டெண்டல் பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். டேவிட் கான்வே இது பற்றி கூறும் போது, பல் துலக்குதலுக்கு பதிலாக மவுத் வாஷ் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மோசமான வாய் பராமபரிப்பு மற்றும் தொடர்ச்சியாக மவுத் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வாய் கொப்பளித்தல் ஆகியவை கேன்சர் வருவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், நான் யாருக்கும் மவுத் வாஷை தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துவதில்லை என்றார்.

காலஸ்கோவ் பல்கலை கழகம் மற்றும் ஐரோப்பிய பல்கலைகழகம் இணைந்து ஒன்பது நாடுகளில் உள்ள 1,962 புற்று நோய் பதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் 1,993 சாதாரண மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.