தனுஷிற்கு இந்திய அளவில் அங்கீகாரத்தைக் கொடுத்த விஷயங்கள் இரண்டு. ஒன்று 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது பெற்றது, மற்றொன்று 'கொல வெறி...' பாடலின் தாறுமாறான ஹிட். ஆனால், தற்போது 'கொலவெறி...' பாடலைப் பற்றிக் கேட்டாலே தனுஷ் கொலை வெறி ஆகிவிடுகிறாராம். இப்போதும் அவர் எங்கே சென்றாலும் 'கொல வெறி...' பாடலைப் பாடுங்களேன் என்று வற்புறுத்துகிறார்களாம்.
அப்படி வற்புறுத்துவதால் மிகவும் டார்ச்சராக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். அதன் பிறகு பல பாடல்களை தனுஷ் பாடியிருந்தாலும் மீண்டும் மீண்டும் 'கொல வெறி..'பாடலை மட்டுமே பாடச் சொல்லிக் கேட்பதை அவர் விரும்பவில்லை என்பதையே அது காட்டுகிறது.
தனுஷ் 'கொல வெறி' பாடலைப் பாடுவதற்கு முன்பே 2003ல் வெளிவந்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் 'நாட்டுச் சரக்கு...' பாடலையும், 'புதுப்பேட்டை' படத்தில் 'எங்க ஏரியா...' பாடலையும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடியிருக்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் 'உன் மேல ஆசைதான்...' என்ற ஹிட்டான பாடலையும் பாடியிருக்கிறார். 'மயக்கம் என்ன' படத்தில் 'ஓட..ஓட..' 'காதல் என் காதல்...'பாடலையும் பாடியிருக்கிறார். 'கொல வெறி' பாடலுக்குப் பிறகு 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் 'போ இன்று நீயாக..., வாட் எ கருவாடு..., அம்மா அம்மா...' ஆகிய பாடலையும் பாடியிருக்கிறார். 'இரண்டாம் உலகம்' படத்தில் 'பனங்கள்ள..விஷமுள்ள...' பாடலையும், 'அனேகன்' படத்தில் 'டங்கா மாரி...' பாடலையும் பாடியிருக்கிறார்.
இவ்வளவு பாடல்களையும் பாடிய பிறகு 'கொல வெறி' பாடலையே திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்பதுதான் அவரது கேள்வியாக உள்ளது. ஆனால், இனி 'அனேகன்' பாடலான 'டங்கா மாரி...' பாடலின் சூப்பர் ஹிட், 'கொல வெறி'யைக் கேட்கச் செய்யாமல் விட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்.