பவுடர் பாவிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்.

டால்கம் பவுடரில் டால்க் எனப்படும் கனிமம் உள்ளது. இதை தப்பித் தவறியும் வாயில் அல்லது உணவிலோ கலந்துவிட்டாலோ, விழுங்கிவிட்டாலோ ஆபத்து தான் மிஞ்சும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் அனைத்து வகை டால்கம் பவுடர்களுக்கும் பொருந்தும்.

 டால்கம் பவுடரை சுவாசிக்கும் போது உள் இழுப்பதால், குழந்தைகளுக்கு நிமோனியா பிரச்சனை, சுவாசக் கோளாறுகள் வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு உடல் முழுக்க டால்கம் பவுடர் பூசும் போது. கவனமாக இருக்கவும்.சுவாசிக்கும் போது நாசியின் மூலம் உள்செல்லும் டால்கம் பவுடரின் காரணமாக நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.மற்றும் இதன் அதிகப்பட்ச நிலையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்புகள் இருப்பதாய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுவாசிக்கும் போது நாசியின் மூலம் உள்செல்லும் டால்கம் பவுடரின் காரணமாக நுரையீரல் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மற்றும் இதன் அதிகப்பட்ச நிலையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்புகள் இருப்பதாய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.பெண்கள் அவர்களது பிறப்புறுப்பில் டால்கம் பவுடர் உபயோகப்படுத்தும் போது, அதன் வழியாக டால்கம் பவுடரின் நச்சுத்தன்மை பிறப்புறுப்பின் உள்ளே செல்கிறது. இதன் காரணமாய், பெண்களுக்கு கருப்பை வாயில் அலர்ஜி மற்றும் புண், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என அமெரிக்க மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இவை தவிர டால்கம் பவுடரினால் ஏற்படும் பிரச்சனைகளின் அறிகுறிகளாக தொண்டை மற்றும் கண்ணில் எரிச்சல், இருமல்,நெஞ்செரிச்சல் வயிற்று போக்கு வாந்தி காய்ச்சல் என்பவற்றையும் கூறலாம்.