சூப்பரான தேங்காய் லட்டு செய்முறை.

லட்டு என்றாலே மிகவும் சுவையாயானது.அதிலும் வித்தியாசமான முறையில் லட்டு செய்து சாப்பிடுவது அநேகருக்கு விருப்பமான செயலாகும்.எனவே தேங்காய் லட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லட்டு செய்வது என்பது மிகவும் ஈஸியானது. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. அதற்கான செய்முறை உங்களுக்காக....

தேவையான பொருட்கள்: 
முந்திரி (கஜு)-அலங்கரிக்க
 பால் - 2 கப்
துருவிய உலர்ந்த தேங்காய் - 6 கப்
சர்க்கரை - 4 கப்
செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும், அதில் துருவிய தேங்காய் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கிளறி, தேங்காயானது பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, அதனை இறக்கி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்பு கலவையானது வெதுவெதுப்பாக ஆனப் பின்னர், அதனை உருண்டைகளாகப் பிடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்து, அதின் நடுவில் முந்திரியை வைத்து அலங்கரித்து நன்கு குளிர வைத்தால், இலகுவான சூப்பரான தேங்காய் லட்டு ரெடி!!!