மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகப்போகிறார், ஆமாம் அவரது இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, இளையவர் சௌந்தர்யா. இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். செளந்தர்யா, அஸ்வின் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் தற்போது தமிழ் சினிமாவின் இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கோச்சடையான் படத்தின் ஆடியோ வௌியீட்டு விழாவில், தனது மகள்கள் சினிமாவில் இருப்பதை விட ஆளுக்கு இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு இல்லற வாழ்வில், சிறந்த குடும்ப தலைவிகளாக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என்று கூறினார் நடிகர் ரஜினி. சினிமாவில் பிஸியாக இருந்ததால் குழந்தை பிறப்பை தள்ளி வைத்திருந்த சௌந்தர்யா, அப்பாவின் ஆசையை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆமாம் சௌந்தர்யா, தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை ரஜியின் பி.ஆர்.ஓ., தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆக மீண்டும் தாத்தவாகபோகிறார் ரஜினி!