ரோல் சப்பாத்தி செய்முறை.

கேரட் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன்
கோதுமை மாவு - கால் கிலோ
முள்ளங்கி ஒரு கப் 
முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

குறிப்பு:
காரம் விரும்பாதவர்களுக்கு சீனியை பாகு காய்ச்சி தேங்காய் சேர்த்து சாப்பாத்தியில் பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.