தயாரிப்பாளர்களை அம்மாவிடம் திருப்பி விடும் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யாதான் தற்போது பட்ஜெட் படாதிபதிகளின் பேவரிட் நாயகி. முக்கியமாக இவர் நடித்து வெளியான முதல் இரண்டு படங்களுமே ஹிட்டாகியிருப்பதால், லட்சுமிமேனன் பக்கம் நின்று கொண்டிருந்தவர்கள்கூட இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி விட்டனர்.

அந்த வகையில், தற்போது வெள்ளக்கார துரை, பென்சில், காக்கி சட்டை, ஈட்டி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் அவர். மேலும், தற்போதைய நிலவரப்படி மூன்றாம்தட்டு ஹீரோக்களுடனேயே நடித்து வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு புதிய படங்கள் மூலம் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது.
அதனால், தற்போது புதுமுக நடிகர், இளவட்ட நடிகர்களின் படங்கள் என்றாலே முகத்தை திருப்பிக்கொள்கிறாராம். ஆனால், ஹிட் படங்களில் நடித்த நடிகர்களின் படமென்றால் உடனே காது கொடுத்து கதை கேட்கிறாராம். அந்த வகையில் தனக்கு பெரிய அளவில் பர்பாமென்ஸ் பண்ண வாய்ப்பு இல்லாதபோதும் அலட்டிக்கொள்வதில்லையாம். ஹீரோ பெரிய ஆளாச்சே என்று ஓகே சொல்லி விடுகிறாராம். மேலும், முன்பெல்லாம் கதையோடு கரன்சி விசயத்தையும் தானே டீல் பண்ணிய ஸ்ரீதிவ்யா, இப்போது சம்பள விசயமாக பேச படஅதிபர்கள் வாய் திறந்தாலே அது அம்மாவோட டிப்பார்ட்மென்ட் என்று தனது தாய்குலத்தின் பக்கம் திருப்பி விடுகிறாராம். அவரோ, ஸ்ரீதிவ்யாவை விட ரொம்ப கறார் பார்ட்டியாம். முக்கியமாக, தான் சொல்லும் தொகையில் இருந்து ஓரிரு லட்சங்களை தயாரிப்பாளர்கள் குறைத்தாலும் சம்மதிக்க மாட்டாராம். இதுதான் ரேட் முடிந்தால் வெட்டுங்க இல்லே ஏறக்கட்டுங்க என்கிற ரேஞ்சுக்கு பேசுகிறாராம். இதனால் சம்பள விசயத்தில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் ஸ்ரீதிவ்யாவை முற்றுகையிடும் சில கம்பெனிகள் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றன.