ஏ.ஆர்.முருகதாஸ்சின் இயக்கத்தில் வெளியாகி விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞன் கேரக்டரில் விஜய் வருகிறார்.
ரஜினியின் ‘லிங்கா’ படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்தே எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏரி தண்ணீரை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் பக்கம் நின்று போராடும் கேரக்டரில் ரஜினி வருகிறார் என்கின்றனர்.
கத்தி படத்தை பார்த்து ‘லிங்கா’ படக்குழுவினர் அதிர்ச்சியானதாகவும் எனவே ‘லிங்கா’ கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன. ‘கத்தி’ படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இது போல் ‘லிங்கா’விலும் ரஜினி இரட்டை வேடத்தில் வருகிறார். ‘கத்தி’ படத்தின் மைய கருவில்தான் ‘லிங்கா’ படம் தயாராகிறதா என்று ‘லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
‘கத்தி’ படத்துக்கும் ‘லிங்கா’ படத்துக்கும் சம்பந்தம் இல்லை. ‘லிங்கா’ படம் முழுக்க முழுக்க வேறு கதை. ‘லிங்கா’ படத்தின் கதையை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக சொல்லப்படுவது வதந்திதான். மீண்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை.
‘லிங்கா’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் இறுதியில் ரஜினி வரும் காட்சியொன்றை சென்னையில் படமாக்குகிறோம். அது முக்கியத்துவமான காட்சி இல்லை. ரஜினி நடந்து வருவது போன்ற சீன்தான். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.