‘கத்தி’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி உட்பட பலர் நடிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சோழ ராஜ்ஜியத்தின்போது நடந்த போரும் நடப்பு காலத்தில் மியூசியத்தில் நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு மாரீசன் என்று கூறிவந்தனர். ஆனால், படக்குழு மறுத்துள்ளது. இதன் ஷூட்டிங் 10&ம் தேதி சென்னை அருகே போடப்பட்டிருக்கிற பிரமாண்ட அரண்மனை அரங்கில் தொடங்குகிறது. இங்கு விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. 30 நாட்கள் இங்கு ஷூட்டிங் நடக்கிறது.
அடுத்து ஆந்திராவில் பிரமாண்ட பாலம் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இதில் சுதீப் பங்குபெறுகிறார். அடுத்து கேரளாவில் கிராமம் செட்டை நிர்மாணித்து படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர். படத்துக்கு மூன்று தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. எது என்று இன்னும் முடிவாகவில்லை என படக்குழுத் தெரிவித்தது.