தமிழ், மலையாள சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜாரவியின் மகள் ரவீணா. சாட்டை படத்திலிருந்து அவரும் டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். தமிழ், மலையாளம், இந்தி, மொழி படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். அமலா பால் (நிமிர்ந்து நில்), மோனல் கஜ்ஜார் (சிகரம் தொடு), ஸ்ரீதிவ்யா (ஜீவா), சமந்தா (கத்தி), எமி ஜாக்சன் (ஐ) ஆகியோருக்கு சமீபத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.
ரவீணாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்க பாட்டிக்கு என்னோட அம்மா ஸ்ரீஜாரவியை சினிமாவில் நடிக்க வச்சு ஹீரோயினாக பார்க்க ரொம்ப ஆசை. அந்த ஆசை நிறைவேறவில்லை.
கடைசி வரைக்கும் ஹீரோயினுக்கு குரல்தான் கொடுத்தாங்க. பாட்டியோட ஆசையை அம்மாவால நிறைவேற்ற முடியலை. நான் ஏன் நிறைவேற்றக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.
நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். தனுஷூடன் நடிக்க ஆசை. டப்பிங் பேசுறப்போ நிறைய டைரக்டர்ஸ், புரட்யூசர்ஸ், ஆர்டிஸ்டை சந்திக்கிறேன். ஆனால் இதுவரையும் யார்கிட்டேயும் சான்ஸ் கேட்டதில்லை என்கிறார் ரவீணா.