மைனா படத்திற்கு பிறகு விதார்த் நடித்துள்ள ஒரு மாறுபட்ட படம் காடு. காட்டை அழிப்பதால் சமூகத்துக்கும், அதை சார்ந்து வாழும் மனிதர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை குறித்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் விதார்த்-சமுத்திரகனி ஆகியோர் எழுச்சிமிகு வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்காக இசையமைத்திருப்பவர் கே. இவர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அந்த படத்தில் இடம்பெற்ற கன்னித்தீவு பெண்ணா கட்டழகு கண்ணா -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதனால் முதல் படத்திலேயே பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார்.
அதன்பிறகு மிஷ்கின் இயக்கிய முகமூடி மற்றும் ஆரோகனம், அன்னயும் ரசூலும், ஒன்பதுல குரு, பீட்சா உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தற்போது காடு படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முக்கியமாக இதுவரை சிட்டி கதைகளுக்கே இசையமைத்திருககும் கேவை முதன்முறையாக இந்த வில்லேஜ் படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார்கள். காட்டுப்புற மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதையம்சம் என்பதால் அதற்கேற்ற இசைக்கருவிகளை தேடிப்பிடித்து அவுட்புட் கொடுத்திருக்கிறாராம் கே. அதோடு, என்னைப்பத்தி நினைச்சாலே பொறயேறுதே -என்று தொடங்கும் ஒரு மெலோடி பாடலுக்கு இளையராஜாவின் இசைத்தாலாட்டை நினைவூட்டும் வகையில் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்.
இதுபற்றி காடு படக்குழுவினர் கூறுகையில், இந்த படத்தின் இசையைப் பார்க்கையில் அடுத்த இளையராஜா ஆகும் தகுதி கேவுக்கு இருப்பதை எங்களால் உணர முடிகிறது என்று கூறுகிறார். அதையடுத்து கே பேசுகையில், நான் பார்க்கத்தான் சிட்டி பையன் மாதிரி இருப்பேன். ஆனால் எனக்கு கிராமிய இசைதான் அதிகமாக பிடிக்கும். நான் ரசிக்கிற விசயங்கள்தான் இப்போது என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்றார்.