16 கோடி பேர் இணையத்தை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆக உள்ளது. வர்த்தகத்திலும் சரி, சமுதாய தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சரி, பெண்களின் இணையப் பயன்பாடு நாம் அறிந்து வியக்கும் வகையில் உள்ளதாக, இது குறித்து ஆய்வு நடத்திய மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்கtளைப் பரிமாறக் கிடைத்திருக்கும் மொபைல் மெசேஜ் சாதனங்களில், வாட்ஸ் அப் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடி. பெரும்பாலும் இவர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இளைஞர்களுக்கு இணையாக, முதியவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்குப் பதிலாக, வாட்ஸ் அப் பயன்படுத்துவது பல வழிகளில் இவர்களுக்கு மேம்பட்டதாய் உள்ளது.
ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அப்ளிகேஷனில், இந்தியாவில் 76% பேர் பயன்படுத்தும் அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் உள்ளது. இதனை அடுத்து கூகுள் ஹேங் அவுட் 25% மற்றும் வி சேட் (WeChat) 22% ஆக உள்ளது. எனவே, வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் செயல்பாடுகளை பல ஆய்வு மையங்கள் கண்காணிக்கத் தொடங்கி உள்ளன. அதிகம் பெண்களே: வாட்ஸ் அப் உட்பட இது போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களே என அறியப்பட்டுள்ளது.
சராசரியாக, நாள் ஒன்றுக்கு 46 நிமிடங்கள் இத்தகைய அப்ளிகேஷன்கள் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆண்கள் நாளொன்றுக்குப் பயன்படுத்துவது 25 நிமிடங்களே. பெண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டில், 70% பயன்பாடு, கூகுள் சேட், வாட்ஸ் அப் மற்றும் வி சாட் போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டைக் காட்டிலும் எட்டு நிமிடங்கள் கூடுதலாகும்.
பெண்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகையில், அது தங்களின் தனிநபர் சாதனமாக உணர்கின்றனர். பாதுகாப்பானதாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அதனாலேயே, குழுக்களாகத் தகவல் பரிமாறிக் கொள்கையில் சுதந்திரமாகக் கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர். இதில் சுருக்கமாக கருத்துக்களையும் தகவல்களையும் தருவதுதான், தாங்கள் சொல்வதற்கு மதிப்பு கிடைக்கும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர்.
ஆண்களைக் காட்டிலும், பெண்கள் படங்களையும், வீடியோ பதிவுகளையும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இது அவர்கள் வாட்ஸ் அப் மற்றும் அதன் செயல் திறன் மீதுள்ள நம்பிக்கையை இது காட்டுவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.