நான், சலீம் படங்களில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது இந்தியா-பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் 6 நாட்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அதையடுத்து, இறுதிகட்ட வேலைகளில் இறங்கி, கிறிஸ்துமஸ் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் இது கடைசிநேர மாற்றத்துக்கு உட்பட்டதாம்.
அதோடு, இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே தனது அடுத்த பட வேலைகளிலும் இறங்கப் போகிறாராம் விஜய் ஆண்டனி. இந்தியா- பாகிஸ்தானுக்கு பிறகு திருடன், சைத்தான் போன்ற படங்களில் நடிப்பதாக ஏற்கனவே கூறி வந்த அவர், இப்போது அந்த படங்களை தள்ளி வைத்து விட்டு சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
டிசம்பரில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். மேலும், இந்த படத்தின் டைட்டீலை பிச்சைக்காரன் என்று டைரக்டர் சசி சொன்னதும், சற்று அதிர்ச்சியடைந்தாராம் விஜய்ஆண்டனி. அதனால் தனது சினிமா நண்பர்களிடம் இந்த தலைப்பு குறித்து கருத்து கேட்டாராம். அப்போது, கோடீஸ்வரன் மாதிரியான தலைப்புகள்தான் சினிமாவில் தோற்று விடும். ஆனால், பிச்சைக்காரன் போன்ற தலைப்புகள் வைத்தால் கண்டிப்பாக வெற்றிபெறும். இது சினிமா உலகில் செண்டிமென்ட் என்று அவரிடம் சொன்னார்களாம். அதன்பிறகுதான் இந்த தலைப்பையே வைத்துக் கொள்வோம் எனறு சசியிடம் ஓ.கே சொன்ன விஜய் ஆண்டனி, இதற்கு முன்பு தான் நடித்த மூன்று படங்களையும் தானே தயாரித்தது போன்று பிச்சைக்காரனையும் தானே தயாரிக்கிறாராம்.