கட்டிடங்களை கட்டி,அதில் குடி புகுந்த பின் நாம் கட்டிட பராமரிப்பு பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. ஆனால் சிறு விரிசல்,ஓதம் தொடங்கி மழை காலங்களில் நீர் தேங்குதல் போன்றவற்றால் கட்டிடங்களின் ஆயுள் குறைகிறது. நாம் மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்து கொள்வது போல கட்டிடங்களும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பராமரிப்பது அவசியமாகிறது.அவ்வாறு பராமரிக்காத கட்டிடங்கள் விரைவில் இடிந்து விழும் அபாயத்திற்கு செல்வதுடன் கட்டிட உரிமையாளருக்கு அதிக செலவு உண்டாக்குகிறது. ஆகவே கட்டிடங்களை பராமரிக்க இதோ சில எளிய முறைகள்..
சன் சேட்(sun shade ),மேல்கூரை (terrace ),போர்டிகோ போன்றவற்றில் இருக்கும் நீர் வடிகால் குழாய்கள் சிறியதாக இருப்பின் பெரிதாக மாற்றி பதிக்கவும் மழைக்கு முன்பு நீர் வடிகால் குழாய்களில் அடைப்பு மற்றும் மாடிகளில் (terrace ) தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் போடப்பட்டிருக்கும் "மரம் மற்றும் வேண்டாத பொருட்களை" அப்புறபடுத்தவும். கட்டிடம் கட்டியவுடன் சுவர் பூச்சுக்கு மற்றும் மேல்தளத்திற்கு மேல் வேம்பநாடு கோட்டயம் சிமெண்ட் பெயிண்ட் செய்யவும்.இதனால் பூச்சில் இருக்கும் சிறு சிறு துளைகளும் அடைபடும். அதற்க்கு மேல் exterior emulsion பெயிண்ட் primer அடித்து பின் இரு முறை அடிக்கவும். ஒவ்வொரு 5 வருட இடைவேளையிலும் மீண்டும் பெய்ண்டிங் செய்யவும்.
Exterior emulsion ஒரு கோட் மட்டும். பாத்ரூம் முதல் தளத்தில் அமைக்க வேண்டி இருந்தால் sunken கான்கிரீட்டில் நீர் தடுப்பு பூச்சு (waterproof coating ) செய்வது அவசியம்.இதனால் பின்னர் ஏற்படும் பாத்ரூம் கசிவு மற்றும் ஓதத்தில் இருந்து காத்து கொள்ளலாம். கட்டிடம் கட்டி இரு வருடங்களில் சுவர்களில் ஏற்படும் சிறு சிறு விரிசல்களை அக்ரிலிக் கிராக் பில்லர் (Acrylic crack filler) மூலம் பட்டி பார்த்து சரி செய்து பெயின்ட் செய்யவும். பாத்ரூம் டையில்ஸ் ஜாயின்ட்களில்(tiles joints ) சாதாரண ஜாயின்ட் பவுடர் மூலம் பேக் செய்யாமல் எபோக்சி ஜாயின்ட் பில்லர் மூலம் பேக் செய்யவும். பழைய கட்டிடத்தில் இருந்து புது கட்டிடம் எழுப்பும் போது ஏற்படும் ஜாயின்ட் விரிசலை தவிர்க்க Waterproof expert -ஐ அணுகி அதற்குண்டான கெமிகளை பயன்படுத்தவும். ஏற்கனவே உண்டான மேல்தள விரிசல்களை சீலன்ட்(poly sulphide sealant ) மூலம் அடைக்கவும்.
கட்டிட elevation அழகுக்காக போடபட்டிருக்கும் சிவப்பு நிற ஓடுகளின் ஜாயின்ட்கள் சரிவர அடைக்க பட்டிருகிறதா என மழைக்கு முன்பே பரிசோதிக்கவும். மேலும் ஒவ்வொரு முறை சுவர் பெயிண்டிங் செய்யும் போதும் அந்த ஓடுகளின் மேல் exterior emulsion பெயின்ட் செய்யவும். கட்டிடம் கட்டும்போதே குறைந்தபட்சம் 150 சதுர அடிக்கு ஒரு நீர் வடிகால் குழாய்கள் இருக்கும்படி அமைக்கவும். ஜன்னல் மற்றும் கதவு பிரேம்களில் ஏற்படும் விரிசல்களை சிலிகான் சீலன்ட் கொண்டு அடைக்கவும். மேல்நிலை நீர்த்தொட்டி கசிவுகளை waterproof expert மூலம் சரி செய்யவும். அஸ்திவாரத்தை ஒட்டி நீர் வடிகால் குழாய்கள் மூலம் நீர் வடிவத்தை மாற்றி அமைக்கவும்.