சினிமா நடிகர்களுக்கு இழிவாக பேசிய ராதாரவி, காளை: நாசர், விஷால் கொந்தளிப்பு!

நடிகர் சங்க நிரவாகிகள் தேர்தலில், நாடக நடிகர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, சினிமா நடிகர்களை, நடிகர் சங்க பொதுசெயலர் ராதரவியும், துணைத் தலைவர் காயும் விமர்சித்து, மற்ற நடிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி, சரத்குமாரிடம், நடிகர்கள் விஷால் மற்றும் நாசர் புகார் அளித்து உள்ளனர்.

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல், அடுத்த ஆண்டு ஜூனில் நடக்கின்றது. இதில், மீண்டும் போட்டியிட, தற்போதைய சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலர் ராதாரவி ஆகியோர் விரும்புகின்றனர். சினிமா நடிகர்களை விட, நாடக நடிகர்கள் ஓட்டுகள் அதிகமாக இருப்பதால், அவர்களை கவர திட்டமிட்டுள்ளனர்.
இதில், திருச்சி, நாமக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் வசிக்கும், நாடக நடிகர்களை தங்கள் பக்கம் இழுக்க, ராதாரவி அணியினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில், நாடக நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராதாரவி, சக நடிகர்களை இழிவாகப் விமர்சித்து உள்ளனர். அதேபோல், நடிகர் சங்கத்தின் துணை தலைவர் காளையும், நடிகர்களை இழிவாகப் பேசியுள்ளார். இருவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமாருக்கு, நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர், தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர். இது, கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பு ஈடுபடுத்தி உள்ளது.

நாசர் கடிதத்தில்இருந்து... காளையன் பேசிய விவரம்:

“இந்த நாய்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றால், நாடகர் சங்கத்தின் தேர்தலை நடத்த வேண்டும். அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் பணம்.”

ராதாரவி சொன்னது என்ன?

“ அன்றைக்கு நாசரை போடா என்றேன். அவர்களின் திட்டம் என்னவென்றால் நாடக நடிகர்களுக்கு தனிச்சங்கம், சினிமாக்காரர்களுக்கு தனிச்சங்கம் என, இரண்டாக உருவாக்குவதுதான்.”