ரூ.15 லட்சம் வீட்டு வாடகையில் இருக்கும் கேத்ரீனா கைப்

கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.15 லட்சம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள் வாங்குகிறார்.

விளம்பர படங்களில் நடித்தும் கோடி, கோடியாய் சம்பாதிக்கிறார்.கேத்ரீனா கைப்பும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கின்றனர். ரன்பீர் கபூர் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ஆவார். இவரும் இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார்.இருவரும் வெளிநாடுகளில் சுற்றுவது பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்பது என்று காதலை வளர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் கேத்ரீனா கைப்புக்கு ரன்பீர்கபூர் மாதம் ரூ.15 லட்சம் வாடகையில் புதிதாக ஆடம்பர வீடு எடுத்து கொடுத்துள்ளார். மும்பை கடற்கரையோரம் இந்த வீடு அமைந்து இருக்கிறது. வீட்டுக்குள் இருந்து கடல் மற்றும் கடற்கரையோர அழகுகளை ரசிக்கலாம். எனவேதான் அதிக வாடகையை பொருட்படுத்தாமல் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். மாதா மாதம் வாடகையை ரன்பீர்கபூரே செலுத்துகிறார். கேத்ரீனா கைப்பும், கபூரும் இந்த வீட்டில் ஒன்றாக வசிக்க திட்டமிட்டுள்ளனர்.