குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்திருப்பவர் அனிருத். இவர் இசையமைத்த முதல் படமான 3 படத்தின் ஒய்திஸ் கொலவெறி பாடல் தொடங்கி தற்போது கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள செல்பி புள்ள பாடல் வரை அனைத்துமே ஹிட்தான்.
ஒரு பாடல் கூட சோடை போகவில்லை. அந்த அளவுக்கு தான் கம்போஸ் செய்த ஒவ்வொரு பாடல்களிலுமே ஏதாவது ஒரு புதுமை புகுத்தி ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளார் அனிருத். அதிலும் தற்போது விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்ததன் மூலம் முன்னணி இசையமைப்பாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் அனிருத். இந்தநிலையில், அடுத்து மேலும் சில பிரபல ஹீரோக்களின் படங்களும் அவர் பக்கம் திரும்பி நிற்கிறது.
இந்தநிலையில், கத்தி படத்திற்காக அனிருத் கொடுத்த பாடல்களை ஆரம்பத்தில் இருந்தே பாராட்டி வந்த விஜய், சமீபத்தில் அவருக்கு ஒரு பியானோ பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.இதனால் உருகிப்போன அனிருத், அந்த பியானோவை தனது டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுடன் ஷேர் பண்ணியுள்ளார். இதை எனக்கு கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.