மைனா, கும்கி படங்களுக்குப் பிறகு பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கயல். இந்த படத்தில் பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்த ஆனந்தி லீடு ரோலில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே திரைக்கு வரத் தயாராகி விட்ட கயல் படத்தை, கும்கி படத்தை வெளியிட்ட அதே டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் பிரபுசாலமன்.
ஆனால், கும்கி டிசம்பரில் வெளியாகி வெற்றி பெற்றதால் அதே மாதத்தில் செண்டிமென்ட் கருதி இந்த படத்தை அவர் வெளியிடவில்லையாம் பிரபுசாலமன். டிசம்பரில் படத்தை வெளியிட முக்கிய காரணம், இந்த படம் சுனாமியை மையப்படுத்தும் கதையில் உருவாகியிருக்கிறதாம்.
அதன் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகளையும் சொல்லும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்குதல் ஏற்படுத்திய நாளை கருத்தில் கொண்டு, இந்த டிசம்பர் 25-ந்தேதி கயல் படத்தை வெளியிடுகிறாராம். இந்த படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும்போது அதன் பாதிப்பை உணருவார்கள். அதனால்தான் இந்த தேதிதான் கயல் படம் வெளியாக சரியான நாளாக இருக்கும் என்று டிசம்பர் 25-ந் தேதி உறுதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.