நீர்ப்பறவை படத்துக்கு பிறகு சுனைனாவுக்கு கோலிவுட்டில் பெரிய வேல்யூ இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அதற்கு முந்தைய படங்களில நடித்ததை விடவும் அந்த படத்தில் எஸ்தர் என்கிற கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார் அவர். ஆனபோதும், படத்தின் தோல்வி காரணமாக சுனைனாவின் நடிப்பு ரீச் ஆகவில்லை. அதனால் அதன்பிறகு படமே இல்லாத நிலைதான் அவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுனைனா என்கிற பெயர்தான் தனக்கு ராசியில்லை என்று அனுஷா என்றெல்லாம் பெயரை மாற்றி வைத்தார் சுனைனா. அந்த மாற்றம்தான் காரணமோ என்னவோ, தற்போது ஸ்ரீகாந்துடன் நம்பியார், விஜயசேதுபதியுடன் வன்மம் மற்றும் கதிர்வேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நம்பியார், வன்மம் படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்த படங்களில் விஜயசேதுபதி உடன் நடித்துள்ள வன்மம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் சுனைனா. இந்த படத்தில் அவர் விஜயசேதுபதிக்கு ஜோடியும் இல்லை. கிருஷ்ணாவுக்குத்தான் ஜோடி. என்றாலும், விஜயசேதுபதி நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்து வருவதால், இந்த படமும் ஹிட் லிஸ்டில் சேரும்போது நானும் கோடம்பாக்கத்தில் ராசியான நடிகையாகி விடுவேன் என்று கூறி வருகிறார். விஜயசேதுபதியுடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, நந்திதா உள்ளிட்ட நடிகைகளெல்லாம் தற்போது கோலிவுட்டில் பேசப்படும் நடிகைகளாக திகழ்வதுதான் சுனைனாவுக்கு இத்தனை நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.