'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, கோலிவுட்டில், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் சில நடிகைகள், ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால், பல இயக்குனர்கள் ஸ்ரீதிவ்யாவை நோக்கிச் செல்கின்றனர்.
ஆனால், அவருக்கு ஒரு கவலை உள்ளது. உயரம், குறைவாக இருப்பதால், உயரமான ஹீரோக்களுடன் ஜோடி சேருவதில் பிரச்னையாக இருக்குமே என கவலைப்படுகிறார். உயரமான ஹீரோக்களின் படம் என்றால், 'அதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்' என, ஒதுங்கி கொள்கிறாராம். ஆனால், எப்படியோ, உயரமான ஹீரோவான, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, அவரை ஒரு படத்தில் நடிக்க வைத்து விட்டனர். ஜோடிப் பொருத்தம் ஒர்க் அவுட் ஆகுமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.