ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் கத்தி. விஜய் டபுள் ரோலில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்பாக எழுந்து வந்த சர்ச்சைகள் அனைத்தும் தற்போது அடங்கி விட்டது. அதனால் இதுவரை ஏகப்பட்ட டென்சனோடு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்-முருகதாஸ் இருவரும் கடைசி கட்ட படப்பிடிப்பை தெளிவான மனநிலையுடன் படமாக்கி முடித்து விட்டனர்.
அந்த வகையில், கடந்த வாரத்தில் செல்பிபுள்ள பாடலை படமாக்கியவர்கள், பேலன்ஸ் இருந்த சில வசன காட்சிகளையும் படமாக்கி பூசணிக்காய் உடைத்து விட்டார்களாம். அதனால் தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் பின்னணி இசைக்கோர்க்கும் பணிகள் உள்பட இதர வேலைகளும் இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே ஆடியோ வெளியீடு நடந்த நிலையில், ஒரு அதிரடியான கத்தி ட்ரெய்லரை விரைவில் வெளியிடப் போகிறார்களாம். ரிலீசுக்கு முன்பு இந்த ட்ரெய்லரை வெளியிட்டு பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி விடப் போகிறார்களாம்.