இதனால் ஒருகாலத்தில் நடிகைகள் மற்றும் குடும்ப பெண்களின் வரவு அதிகரித்திருந்ததால் கலகலப்பாக காணப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம் பின்னர் வெறிச்சோடியது. இந்த நிலையில், இரண்டு முறை காதல் தோல்வியில் விழுந்து விரக்தியடைந்துள்ள நயன்தாராவையும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வருமாறு அங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
அதோடு, எங்களது ஆசிரமத்துக்கு வந்தால் மன நிம்மதி இல்லாதவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். அவர்களுக்கு தேவையான தியானம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்களாம். ஆனால், நான் பிரமச்சர்யம் கடைபிடித்து வருகிறேன் எனறு சொல்லிக்கொண்டு சமீபகாலமாக கூறிவரும் நயன்தாரா, நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு செல்வது பற்றி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதுகுறித்து அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.