நடிப்பை தொடர கௌதமி ஆர்வம்.

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது, கமலின், 'பாபநாசம்' படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கௌதமி. ஏற்கனவே, கமலுடன், 'நம்மவர், தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள்' என, சில படங்களில் நாயகியாக நடித்த கௌதமி, இப்படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார்.

 'பாபநாசம்' படத்தில், திருநெல்வேலி தமிழச்சியாக நடிக்கும் கௌதமி, இதுவரை, அந்த படத்தின் ஒரிஜினலான, 'த்ரிஷ்யம்' மலையாள படத்தை பார்க்கவில்லையாம். இந்த ரீ-என்ட்ரிக்கு பின், இனி தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.