'அட்டகத்தி' நந்திதா நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவருக்கு கன கச்சிதமாக பொருந்தி வருவதோடு, அந்த படங்களும் ஹிட்டாகி வருகின்றன. இதுபற்றி நந்திதா கூறுகையில், 'ஒரு படத்தின் கதையை கேட்டதும், அதுபற்றிய கருத்தை, என்னால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு, எனக்கு சினிமாவில் போதிய அனுபவம் இல்லை.
ஆனால், என்னை தேடி வரும் படங்கள் எல்லாமே, வெற்றி பெறக் கூடியதாகவே உள்ளன.
கதாபாத்திரங்களுமே எனக்கு பொருத்தமானதாகவே கிடைத்து வருகின்றன. ஆனால், எந்த கதாபாத்திரத்தையும் நான் தேடிச் செல்வதில்லை. கதாபாத்திரங்கள் தான், என்னை தேடிவருகின்றன. அதற்கு காரணம் இயக்குனர்கள் தான். எனக்கு பொருந்தக் கூடிய வேடங்களாகப் பார்த்து நடிக்க வைத்து வருகின்றனர்' என்கிறார்.