தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி, நான் ஈ, மாவீரன் படங்கள் மூலமாக தமிழுக்கும் அறிமுகமானவர் அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட படம். படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இது என் அப்பா எழுதிய கதை என்கிறார் ராஜமவுலி. அவர் கூறியிருப்பதாவது: என் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒரு இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு கதை எழுதி வைத்திருந்தார். அதை படமாக எடுக்கவும் ஆவல் கொண்டிருந்தார். அவரால் முடியவில்லை. அது ஒரு நாட்டுக்காக இரண்டு உறவினர்கள் மோதிக் கொள்கிற கதை.
வெறும் போராக மட்டுமில்லாமல் உறவு ரீதியாக செண்டிமெண்ட் மூலமாகவும் மோதுகிற கதை. அந்த கதையின் மைய கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பல வருடங்களாக அதை டெவலப் செய்துதான் பாகுபலியின் கதையை உருவாக்கினேன். தெலுங்கு, தமிழில் தயாரானாலும் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்ய இருக்கிறோம். மொழிகளை தாண்டி இந்தப் படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் ராஜமவுலி.