தனுசுடன் இணைகிறார் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கமல், விஜய், அஜீத் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி விட்ட த்ரிஷா ரஜினியுடனும், அவரது மருமகன் தனுசுடனுதான் இதுவரை ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இதில் ரஜினியுடன் நடிப்பதற்கு லிங்கா படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அழைப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் த்ரிஷா. ஆனால், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவையும், தெலுங்கில் படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்காவையும் அப்படத்துக்கு புக் பண்ணி த்ரிஷாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டனர்.

மேலும், தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த த்ரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் த்ரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் அந்த வாய்ப்பு டாப்சிக்கு சென்றது. வெள்ளாவி நடிகை என்ற அடைமொழியையும் அப்படம அவருக்கு கொடுத்தது.


இந்த நிலையில், தற்போது இறுதிச்சுற்றில் இருந்து கொண்டிருக்கும் த்ரிஷா. வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுசுடன் நடிப்பது உறுதியாகியிருக்கிறதாம். இந்த படத்தில் நடிக்க ஏற்கனவே கயல் ஆனந்தி உள்பட பல நடிகைகள் முயற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது த்ரிஷாவை தேடியே இந்த வாய்ப்பு சென்றிருக்கிறதாம். ஆக, த்ரிஷா எடுத்து வந்த பல ஆண்டு முயற்சிக்கு இப்போதுதான் கைமேல் பல்ன் கிடைத்திருக்கிறது.