ஆர்கேவின் பேச்சை கமலே வியந்து பாராட்டினாராம்!

சினிமாவில் ஹீரோ, வில்லன் என நடித்து வரும் நடிகர் ஆர்.கே, தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ''என் வழி தனி வழி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், சுயமுன்னேற்றம் குறித்த தன்னம்பிககை பொதுக்கூட்டங்களிலும் சிறப்புரையாற்றி வருகிறார். அவரது தன்னம்பிக்கை தரும் பேச்சு பலருக்கு நன்மை விளைவித்தும் வருகிறதாம்.

இதுபற்றி ஆர்கே கூறும்போது, நான் இதுவரை தன்னம்பிக்கை குறித்து ஏராளமான மேடைகளில் பேசியிருக்கிறேன். அந்த வகையில் எனது பேச்சை 2 கோடிக்கும் மேலான தமிழக மக்கள் கேட்டிருக்கிறார்கள. அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.இது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதனால் சுயமுன்னேற்றம் தரக்கூடிய தன்னம்பிக்கை பேச்சினை தொடர்ந்து வருகிறேன் என்று கூறிய ஆர்கே, ஒரு இலக்கை குறி வைத்து யார் பயனித்தாலும் இறுதியில் அது வெற்றியிலேயே முடியும் என்பதை ஆணித்தரமாக சில உதாரணங்களை அவர்கள் முன் எடுத்து வைத்து நம்பிக்கையூட்டு வதாகவும் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, ஒரு முறை கமல் சாரே என்னுடைய பேச்சைக்கேட்டு வியந்து பாராட்டினார். இப்படி என் பேச்சினால் மக்களுக்கு நல்லது நடப்பதோடு பெரிய மனிதர்கள் என்னை பாராட்டுவதால், சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எனது பணியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் ஆர்.கே.