தனுஷ் படத்தில் காஜல்அகர்வால் நடிப்பது உறுதிதானாம்!

தெலுங்கில் யவடு , கோவிந்துடு ஆண்டாரிவாரிலே ஆகிய படங்களில் நடித்துள்ள காஜல்அகர்வாலுக்கு அடுத்து அங்கு புதிய படங்கள் இல்லையாம். அதனால் தற்போது இந்தியில் கமிட்டாகியுள்ள 2 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜில்லாவுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார் காஜல்.

முக்கியமாக, மீண்டும் விஜய், சூர்யா என தான் ஏற்கனவே நடித்த ஹீரோக்களுடன் மீண்டும் டூயட் பாடுவதற்காக கோடம்பாக்கத்திற்கு விசிட அடித்து படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, இதுவரை கறாலாக சம்பளம் பேசி வந்த காஜல், இப்போது பெரிய ஹீரோ படவாய்ப்பு என்றால் முடிந்தவரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாகவும் முன்மொழிந்து வருகிறாராம்.


அவரிடத்தில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்பட்டதே. அந்த படம் என்னாச்சு? என்று கேட்டால், அந்த படத்தில் நான் நடிப்பது உறுதியான விசயம்தான். ஜில்லாவில் நடித்து வந்தபோதே அந்த படத்திற்கு என்னை கமிட் பண்ணி விட்டனர். தற்போது அனேகன், ஷாமிதாப் படங்களை முடித்து விட்ட தனுஷ், அடுத்து வெற்றி மாறன் இயக்கும் சூதாடி படத்தில் நடிக்கிறார். அந்த படம் முடிந்ததும், பாலாஜி மோகன் புராஜக்ட் தொடங்குகிறது. நவம்பர் மாதம் அந்த படப்பிடிப்பு தொடங்குகிறது.