ஜெயம்ரவியுடன் மீண்டும் நடிக்க விரும்பும் நீது சந்திரா!

மாதவன் நடித்த யாவரும் நலம், விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் நீது சந்திரா நடித்திருந்தபோதும், மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இடம்பெற்ற கன்னித்தீவு பெண்ணா என்ற குத்துப்பாட்டு மூலம்தான் பிரபலமானார். அதையடுத்து ஜெயம்ரவி நடித்த ஆதிபகவன் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவருக்கும் ஜெயம்ரவிக்கும் ஒரு சண்டை காட்சிகூட இருந்தது. ஆனால் அதன்பிறகு படமே இல்லாத நீதுசந்திராவுக்கு தற்போது புதுமுக நடிகர் நடித்துள்ள திலகர் என்ற படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் அவர் நடனமாடும் பம் சிம் பம் என்ற பாடலில் கன்னத்தீவு பொண்ணா பாடலை விடவும் அதிரடியான ஆட்டமாடியிருக்கிறாராம் நீது சந்திரா.


அதனால் இந்த படம் வந்தால் மீண்டும் இளவட்ட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுவேன் என்று சொல்லும் நீதுவுக்கு மீண்டும் ஜெயம்ரவியுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். காரணம் கேட்டால், நான் இதுவரை நடித்த ஹீரோக்களில் ஜெயம்ரவி நல்ல நடிகர். ஒரே படத்தில் என்னுடன் நண்பராகி விட்டார். அதோடு, ஆதி பகவன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்த அவரது நடிப்பும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் மாதிரியான திறமையான நடிகர்களுடன் நான் மட்டுமின்றி மற்ற நடிகைகளும் நடிக்க விரும்புவார்கள் என்கிறார் நீதுசந்திரா.