தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம்.
மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால்.
வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக.
ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக.
மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இந்த ஆறு நகைகளையும் அணிந்தால் தான், ஒரு பெண்ணின்அலங்காரம் முழுமை அடைந்ததாக பொருள்.
இந்த பலன்களை, பெண்களாகிய நாம் நமக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.
எந்த விரலில் அணியலாம் மோதிரம் அணிந்திருக்கும் பெண்களின் கை தான் வீட்டில், குடும்பத்தில் ஓங்கியிருக்க வேண்டும்; செல்வாக்குடன் விளங்க வேண்டும். மோதிரம் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் நல்லது என்பதற்கு,
நம் முன்னோர், சில, பல காரணங்களையும், ஆய்வாளர்கள் பல, சில காரணங்களையும் கண்டுபிடித்து, கடைபிடிக்க சொல்லியுள்ளனர்.
நம்முடைய நான்காவது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும். அதற்கு பெயரே, மோதிர விரல் தான். நம் ஐந்து விரல்களுமே, நம் ஐந்து சொந்தபந்தங்களை குறிக்கின்றன.
சுண்டு விரல்: நம் பிள்ளைகளை
மோதிர விரல்: வாழ்க்கை துணையை
நடு விரல்: நம்மையே குறிக்கும்.
ஆள்காட்டி விரல்: நம் சகோதரர்களை
பெரு விரல்: பெற்றோரை
சுண்டு விரலில்: மோதிரம் அணிவது வழக்கத்தில் இல்லை, அணிந்தாலும் இதய சக்தி ஓட்டம் தடைப்படும்.
மோதிர விரலில்: ஒவ்வொருவரும்,
கண்டிப்பாக ஒரு வளையமாவது
அணிந்திருக்க வேண்டும். இதய நோய், வயிற்றுக் கோளாறுகளை தடை செய்யும். இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.
நடு விரலில்: பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை. இஸ்லாமியத்தில் நடுவிரலில் மோதிரம் அணிவதை, தடை செய்துள்ளதாக ஹதீஸ் தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் நபர்களின் முகத்தை வைத்து, குணாதிசயங்களையும்; நடை, உடை பாவனைகளை வைத்து குணத்தையும்; உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து, சாமுத்திரிகா லட்சணத்தையும் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். தற்போது கை விரல்களையும், அதில் அணியும் மோதிரங்களையும் வைத்தும், ஆராய்ச்சி செய்து நபர்களின் குணாதிசயங்களை கூற முடியும் எனக் கூறப்படுகிறது.
நம் நாட்டு கலாசாரப்படி, மோதிரம் மாற்றிக் கொள்வது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தானே தவிர, அதுவே திருமணம் முடிந்ததற்கு அத்தாட்சி கிடையாது. ஆள்காட்டி விரலே சிறந்தது
மாணிக்கம், முத்து, கோமேதகம், மரகதம், வைரம், வைடூரியம், பவளம் என, இத்தனை அதிர்ஷ்ட கற்களையும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தில் பதித்து, மோதிரமாக, பெண்கள், இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது, உடம்புக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, நல்லது நடக்கும்படியாக நம் செயல்பாட்டினை வைத்திருக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
புஷ்பராகம், கனக புஷ்பராகம் கற்கள் பதித்த வெள்ளி மோதிரம், ஆள்காட்டி விரலிலும், நீலம் கற்களை பதித்த வெள்ளி, பிளாட்டினம் மோதிரத்தை நடு விரலிலும், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரத்தை, சுண்டு விரலிலும் அணிகிற வழக்கமும், இப்போது பரவியுள்ளது.
உடம்பில் எந்த நகையாக இருந்தாலும், இந்துக்கள் தங்கத்தில் அணியவே விரும்புகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில், வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் ஏற்றது என்பது ஒரு காரணம் என வைத்துக் கொண்டாலும், தங்கம் எப்போதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நம் பெண்களிடம் உள்ளது.
நீள விரலின் மகிமை
ஆள் காட்டி விரலை விட, மோதிர விரல் நீளமாக இருந்தால், ‘ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்’ என்ற மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.
மோதிர விரலின் நீளம், அளவை வைத்து, இதயநோய், புற்று நோய், சளித்தொல்லை போன்ற நோய்கள் உள்ளனவா என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும்.
ஆள்காட்டி விரல், மோதிர விரல், இரண்டுக்கும் உள்ள உயரம், இடை
வெளியின் விகிதம் வைத்து, பாலின ஹார்மோன்களை கூட, கணக்கிட்டு கூறமுடியும்
என்கிறது ஜெனிவா பல்கலைக் கழகம்.
ஆண்மையின் அடையாளத்தை
நிர்ணயிக்கும், ‘டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் அளவு மிகுந்தால், மோதிர விரல் நீளமாகவும், பெண்மையை நிர்ணயிக்கும், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் இருந்தால், ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்குமாம்.
பொதுவாக ஆள்காட்டி விரலை விட, மோதிர விரல், நீளமாக உள்ள ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.மோதிரம் விரலில், மோதிரம் அழுத்தும் இடத்திலிருந்து, நரம்பு நேரிடையாக
இதயத்தை போய் சேர்கிறது.
ஐரோப்பிய நாடுகளில், திருமணத்திற்கு முன், இடது கை விரலில் போட்டிருக்கும் மோதிரம், திருமணத்திற்கு பின், வலது கை விரலுக்கு மாற்றப்படுமாம். மோதிர விரல் என, பெயர் சூட்டப்பட்டுள்ள நம் கையின் நான்காவது விரலில், திருமணத்தின் போது கண்டிப்பாக மோதிரம் போட வேண்டும். இது, வரதட்சணையாக மாமியார் போட்டாலும் சரி; நமக்கு நாமே போட்டுக் கொண்டாலும் சரி. நம் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே, நான்காவது விரலில் தான் உள்ளது.