அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஹன்ஷிகா!....

நடிகைகளைப் பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதாவது சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும்போதே சம்பாதித்துக்கொள்ள வேண்டும், அதேபோல், தங்களது பேவரிட் ஹீரோக்களுடனும் டூயட் பாடிக்கொள்ள வேண்டும். அதை தவற விட்டால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான்.

இது குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே சினிமாவையும் படித்து வரும் ஹன்சிகாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோடம்பாக்கத்துக்குள் வந்த அவர், பின்னர், விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சித்தார்த், ஆர்யா, சிம்பு, கார்த்திக், உதயநிதி என பல ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.

அதனால் இதே வேகத்தில் அஜீத்துடனும் நடித்து விட வேண்டும் என்று முழு ஆர்வத்தில் இருக்கிறார் ஹன்சிகா. அதனால், அஜீத்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் டைரக்டர்களை கண்டறிந்து அவர்களிடம், அஜீத்துடன் என்னை ஜோடி சேருங்கள் என்று இப்போதே அப்ளிகேசன் போட்டு வைத்து வருகிறார் ஹன்சிகா.