என் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா.?! இன்ப அதிர்ச்சியில் பாபி சிம்ஹா!!

ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹாவை, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் பத்ரி. ஆக, தன் மீது விழுந்திருந்த வில்லன் என்கிற நெகடீவ் இமேஜை இந்த படத்தில் மாற்றி விடும் வகையில் நடித்துள்ளார் சிம்ஹா. ஆனால், அடுத்தபடியாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவர் திட்டம் எதுவும போடவில்லை.

அதற்குள்ளாக, தம்பி என் அடுத்த படத்தோட ஹீரோ நீதான் என்று அவர் பாக்கெட்டில் அட்வான்சை திணித்து விட்டார் மரியான் டைரக்டர் பரத்பாலா. தனுஷ் நடித்த அந்த மரியான் படம் ப்ளாப்தான் என்றாலும், தேசிய விருது பெற்ற நடிகரை இயக்கியவராச்சே. அதனால் அவர் சொன்ன கதையை கேட்டும் கேட்காமலும் நடிப்பதற்கு டிரிபிள் ஓ.கே சொல்லி விட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு திரிகிறார் சிம்ஹா.

இந்த நிலையில், சமீபத்தில் பரத்பாலாவை சிம்ஹா சந்தித்தபோது, படத்தைப்பற்றிய சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பேச்சுவாக்கில் படத்துக்கு யார் சார் மியூசிக் என்று சிம்ஹா கேட்டதற்கு, ஏ.ஆர்.ரகுமான்தான். வந்தே மாதரம் வீடியோ ஆல்பத்திற்கு இசையமைத்தபோதே ஏற்பட்ட நட்புதான் மரியானுக்கும் ரகுமானை இசையமைக்க வைத்தது. அது இந்த படத்திலும் தொடர்கிறது என்றாராம்.
அவர் சொன்ன இந்த சேதி பாபி சிம்ஹாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அப்படின்னா நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படமே மெகா படமாகப்போவுது என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் புதிய எனர்ஜியுடன் கூறி வருகிறார் பாபி.