தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இருந்தே அவ்வப்போது ஏதாவது ஒரு கானா பாடகர்கள் வருவதும் போவதுமாகத்தான் இருக்கிறார்கள். அதில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடிய கானா உலகநாதன் அந்த ஒரே பாட்டில் சிகரம் தொட்டார்.
ஆனால் அதையடுத்து அவருக்கு எந்த இசையமைப்பாளர்களும் பாடுவதற்கு சான்ஸ் கொடுக்கவில்லை.
ஆனபோதும் அந்த ஒரு பாட்டை வைத்தே உலகமெங்கும் கச்சேரிகள் நடத்தி உலக அளவில் பிரபலமாகி விட்டார் உலகநாதன். அவரையடுத்து, கானா பாடலுக்கு இருக்கிற மரியாதையை தெரிந்து கொண்டு தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் இருந்து ஏராளமான கானா பாடகர்கள் கோடம்பாக்கத்துக்கு படையெடுத்தனர். இருப்பினும் அவர்களால் வெளிச்சத்துக்கு வரமுடியவில்லை.
இந்த நிலையில், அட்டகத்தி படத்தில் ஆடி போனா ஆவணி என்று பாடியபடி என்ட்ரி ஆனார் கானா பாலா. இவர் ஒரு வழக்கறிஞரும்கூட. ஆனால் இவர் முந்தைய கானா பாடகர்களைப் போன்று இல்லாமல் தொடர்ச்சியாக சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக இளவட்ட ரசிகர்களின் மனதை தொட்ட பாடகராகி விட்டார். முதலில் பாடினார். பின்னர் பாட்டு எழுதி பாடினார். அதன்பிறகு தான் பாடும் பாடல்களுக்கு தானே நடனமாடியும் வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி மனசைத்தொட்ட பாடல்களை பாடி சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கானா பாலா எப்போதும் ஜாலியாகவே காணப்படுவாராம். ஆனால், அவரை யாராவது தொட்டு பேசினால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். பழகினவர்தானே என்று பேச்சுவாக்கில் மற்றவர்களின் கை இவர் மீது தெரிந்தோ தெரியாமலோ பட்டு விட்டால் அப்புறம் மெட்ராஸ் கானாதானாம். அந்த அளவுக்கு டென்சனாகி விடுவாராம் மனிதர். இதனால் அவரது நீண்டகால நண்பர்கள் கூட எட்ட நின்றே அவரிடம் பேசுகிறார்களாம்.